ஆசியாவில் கிரிக்கெட் விளையாடும் நாடுகளைக் கொண்டு இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை ஆசியக் கோப்பை தொடர் நடத்தப்பட்டு வருகிறது, இதன் அடுத்த சீசன் செப்டம்பர் மாதம் ஆறாம் தேதி தொடங்கி பத்தொன்பதாம் தேதி வரை நடக்கவுள்ளது. இதற்காக அணிகள் தயாராகி வருகின்றன.
இந்நிலையில் இந்த தொடரில் இந்திய அணியில் இடம்பிடிக்கப் போகும் வீரர்கள் யார் யார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஏனென்றால் 11 பேர் கொண்ட அணியில் ஒவ்வொரு இடத்துக்கும் இந்தியாவில் பல வீரர்கள் போட்டி போடுகின்றனர். காலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக ரிஷப் பண்ட் இந்த தொடரில் விளையாடமாட்டார் என உறுதியாகியுள்ள நிலையில் சஞ்சு சாம்சன் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இடத்துக்கு முதல் ஆளாகக் கருதப்படுகிறார். இந்நிலையில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் மிகச்சிறப்பாக விளையாடிய பெங்களூர் அணியின் ஜிதேஷ் ஷர்மா இரண்டாவது விக்கெட்கீப்பராக அணியில் இடம்பிடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.