நான் ஓய்வை அறிவித்துவிட்டால் என்னை நீங்கள் பார்க்க முடியாது… கோலி தடாலடி!

vinoth

வியாழன், 16 மே 2024 (13:58 IST)
ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடக்கிறது. அதற்காக அமெரிக்காவில் வைக்கப்படும் விளம்பரங்களில் விராட் கோலியின் புகைப்படம்தான் இடம்பெற்றுள்ளது. முதலில் இந்த தொடரில் கோலியை எடுக்க வேண்டாம் என பிசிசிஐ நினைத்தது. அது சம்மந்தமாக செய்திகளை கசியவிட்டது. ஆனால் அதற்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியதை அடுத்து கோலி அணியில் இடம்பெற்றார்.

தற்போது 35 வயதாகும் கோலி தனது கிரிக்கெட் வாழ்வின் உச்சகட்ட பார்மில் உள்ளார். நடந்து வரும் ஐபிஎல் தொடரில் அவர்தான் அதிக ரன்கள் சேர்த்த வீரராக இருக்கிறார். இந்நிலையில் அவரின் ஓய்வு பற்றி அடிக்கடி பேச்சு எழுகிறது.

இதுபற்றி பேசியுள்ள கோலி “ஒரு விளையாட்டு வீரர் என்றால் அவர் பயணத்தில் கண்டிப்பாக முடிவு இருக்கும். என்னால் கடைசி வரை விளையாடிக் கொண்டே இருக்க முடியாது. நான் எந்த வருத்தமும் இன்றி விடைபெற வேண்டும் என நினைக்கிறேன். என்னுடைய முழு ஆற்றலையும் நான் காட்ட விரும்புகிறேன். நான் ஓய்வை அறிவித்துவிட்டால் கொஞ்ச நாட்களுக்கு என்னை நீங்கள் காண முடியாது” எனக் கூறியுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்