இந்திய அணிக்கு டிராவிட்டுக்குப் பிறகு பயிற்சியாளர் இவர்தானா? பிசிசிஐ போடும் ஸ்கெட்ச்!

vinoth

புதன், 15 மே 2024 (06:45 IST)
இந்திய கிரிக்கெட் அணிக்கு மூன்று வடிவிலான போட்டிகளுக்கும் தலைமை பயிற்சியாளராக கடந்த மூன்று ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறார் ராகுல் டிராவிட். ஆனால் அவர் தலைமையில் முக்கியமான சில கோப்பை தொடர்களில் இந்திய அணி தோற்று வெளியேறியது அதிருப்தியை ஏற்படுத்தியது. சமீபத்தில் நடந்த உலகக் கோப்பை தொடரிலும் இந்திய அணி இறுதிப் போட்டியில் தோற்று மூன்றாவது முறையாகக் கோப்பையை வெல்ல இருந்த வாய்ப்பைத் தவறவிட்டது.

உலகக் கோப்பை தொடரோடு அவர் பதவி காலம் முடிந்தாலும் வரவிருக்கும் டி 20 உலகக் கோப்பை தொடர் வரை அவரின் பதவி காலம் நீட்டிக்கப்பட்டது. இப்போது ஜூன் மாதத்தோடு அவர் பணிக்காலம் முடிய இருக்கும் நிலையில் இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளரை தேடும் பணியில் பிசிசிஐ ஈடுபட்டு வருகிறது. அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவித்துள்ளது.

இதற்கிடையில் இந்திய அணிக்குப் பயிற்சியாளராக பணியாற்ற சி எஸ் கே அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங்கிடம் பேச்சுவார்த்தை நடத்துவதாக சொல்லப்படுகிறது. அவர் தலைமையில் சி எஸ் கே அணி ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்