இந்தியாவுக்கு ஆஸ்திரேலியா கொடுத்த இலக்கு.. ஒரு விக்கெட்டை இழந்த இந்தியா..!

Mahendran

சனி, 25 அக்டோபர் 2025 (13:55 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே நடைபெற்று வரும் மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 236 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. 
 
இந்திய அணியில் பந்துவீசிய ரானா அபாரமாக செயல்பட்டு நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனை அடுத்து, 237 என்ற இலக்கை நோக்கி தற்போது இந்திய அணி விளையாடி வருகிறது.
 
கேப்டன் சுப்மன் கில் 24 ரன்களில் அவுட்டான நிலையில், ரோஹித் சர்மா 32 ரன்களிலும், விராட் கோலி 12 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர். சற்று முன் வரை இந்திய அணி 13 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 81 ரன்கள் எடுத்துள்ளது. இன்னும் வெற்றிக்கு 156 ரன்கள் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்