ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகள் பாலியல் சீண்டல்: இந்தூரில் ஒருவர் கைது

Mahendran

சனி, 25 அக்டோபர் 2025 (14:54 IST)
இந்தியாவில் நடக்கும் மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்றுள்ள ஆஸ்திரேலிய அணியை சேர்ந்த இரண்டு வீராங்கனைகள், மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் பாலியல் சீண்டலுக்கு ஆளானதாக தகவல் வெளியாகி உள்ளது. காபி கடைக்கு சென்றபோது மோட்டார் சைக்கிளில் வந்த அகில் கான் என்ற நபர் அவர்களை பின்தொடர்ந்து, ஒரு வீராங்கனையை அநாகரிகமாக தொட்டுவிட்டுச் சென்றதாக புகார் எழுந்துள்ளது.
 
உடனடியாக, அணி பாதுகாப்பு அதிகாரி மூலம் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கிருந்த ஒருவரின் உதவியுடன் சந்தேக நபரின் வண்டி எண்ணை கொண்டு, குற்றவாளியை இந்தூர் காவல்துறை கைது செய்தது.
 
குற்றவாளி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த சம்பவம் துரதிர்ஷ்டவசமானது என்று கூறிய பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா, குற்றவாளியை விரைந்து பிடித்த மத்திய பிரதேச காவல்துறையின் நடவடிக்கையை பாராட்டினார். ஆஸ்திரேலியக் கிரிக்கெட் வாரியமும் இச்சம்பவத்தை உறுதிப்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்