சர்வதேசக் கிரிக்கெட்டில் புதிய சாதனை…. விராட் கோலியின் அசாதாரண மைல்கல்!

Webdunia
வெள்ளி, 21 ஜூலை 2023 (08:11 IST)
இந்திய கிரிக்கெட் அணி உருவாக்கிய மிகச்சிறந்த வீரர்களில் ஒருவராக உருவாகியுள்ளார் கோலி. இதுவரை ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் பல சாதனைகளைப் படைத்திருக்கும் அவர் தற்போது இன்னொரு இறகை தன்னுடைய சாதனை கிரீடத்தில் பெற்றுள்ளார்.

தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டி அவரின் 500 ஆவது சர்வதேச போட்டியாகும். இந்த மைல்கல்லை எட்டும் 10 ஆவது கிரிக்கெட் வீரராக கோலி சாதனை படைத்துள்ளார்.

இதற்கு முன்னர் 500 மற்றும் அதற்கு மேற்பட்ட சர்வதேச போட்டிகளில் விளையாடிய வீரர்கள்.
  1. சச்சின் டெண்டுல்கர் – 664 போட்டிகள்
  2. மஹிலா ஜெயவர்தனே – 652 போட்டிகள்
  3. குமார் சங்ககாரா – 594 போட்டிகள்
  4. சனத் ஜெயசூர்யா – 586 போட்டிகள்
  5. ரிக்கி பாண்டிங் – 560 போட்டிகள்
  6. தோனி – 538 போட்டிகள்
  7. ஷாஹித் அப்ரிடி – 524 போட்டிகள்
  8. ஜக் காலிஸ் – 519 போட்டிகள்
  9. ராகுல் டிராவிட் – 509 போட்டிகள்
  10. விராட் கோலி – 500 போட்டிகள்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்