மீண்டும் டெஸ்ட் கேப்டன்சியை ஏற்கிறாரா விராட் கோலி?

vinoth
வியாழன், 2 ஜனவரி 2025 (15:16 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடந்து வரும் பார்டர் கவாஸ்கர் கோப்பைத் தொடரில் ஆஸ்திரேலியாவின் கையே ஓங்கியுள்ளது. இதுவரை நடந்த நான்கு போட்டிகளின் முடிவில் 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா முன்னிலை வகிக்கிறது. ஐந்தாவது டெஸ்ட் போட்டி நாளை சிட்னியில் நடக்கவுள்ளது.

இந்த தொடர் முழுவதும் ரோஹித் ஷர்மாவின் பேட்டிங் செயல்திறன் மிக மோசமாக உள்ளது. அவர் இந்த தொடரில் இதுவரை 32 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளது. அவர் மொத்தமாக சந்தித்ததே 100 பந்துகளுக்குள்தான். அதனால் இந்த மோசமான ஃபார்ம் காரணமாக அவர் இந்த தொடர் முடிந்ததும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவிக்கலாம் என தகவல்கள் பரவி வருகின்றன. மேலும் சிட்னி டெஸ்ட் போட்டியின் ஆடும் லெவன் அணியிலும் அவர் இடம்பெற மாட்டார் என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில் ரோஹித் ஷர்மா ஓய்வை அறிவித்ததும் டெஸ்ட் கேப்டன்சி பொறுப்பு பும்ராவுக்கு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரோஹித்துக்குப் பிறகு மீண்டும் விராட் கோலி கேப்டன்சி பொறுப்பை ஏற்பார் என தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. விராட்டின் கேப்டன்சியில் இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தும் அணியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்