பிசிசிஐ வேண்டுகோளை ஏற்காத கோலி…. டெஸ்ட் ஓய்வில் உறுதியில் இருக்கிறாரா?

vinoth

திங்கள், 12 மே 2025 (07:23 IST)
இந்திய கிரிக்கெட்டில், ஏன் உலகக் கிரிக்கெட்டிலேயே கடந்த 10 ஆண்டுகளில் அதிகமான ரசிகர்களை கொண்ட ஸ்டார் ப்ளேயராக இருப்பவர் விராட் கோலி. அவ்வபோது அதிரடி முடிவுகளை எடுக்கும் விராட் கோலி, தற்போது தான் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற அனுமதிக்க வேண்டி பிசிசிஐக்கு கடிதம் எழுதியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

ஆனாலும் இதுகுறித்து ஆலோசிக்கும்படி விராட் கோலிக்கு பிசிசிஐ பரிந்துரைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் பல ஜாம்பவான் வீரர்களான பிரையன் லாரா, மைக்கேல் கிளார்க் உள்ளிட்டவர்கள் கோலியின் இந்த முடிவை ஏற்க மறுத்து, அவர் இன்னும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வேண்டும் எனக் கேட்டுள்ளனர்.

இது சம்மந்தமாக பிசிசிஐ இந்திய கிரிக்கெட்டில் மிகவும் மதிக்கப்படும் ஒரு நபர் மூலம் கோலியிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் சொல்லப்பட்டது. ஆனால் விராட் கோலி, அந்த பேச்சுவார்த்தையில் இறங்கிவரவில்லை என சொல்லப்படுகிறது. தன்னுடைய ஓய்வு முடிவில் உறுதியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்