கடந்த ஆண்டில் விளையாட்டு வீரர்கள் மீது நடத்தப்பட்ட ஊக்கமருந்து சோதனையில் 142 வீரர்கள்ம், வீராங்கனைகள் ஊக்கமருந்து பயன்படுத்தியதாக தேசிய ஊக்க மருந்து தடுப்பு அமைப்பு (NADA – National Anti Drug Agency) தெரிவித்துள்ளது.
இந்தியாவில் பல்வேறு விளையாட்டுகளில் ஏராளமான வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொள்ளும் நிலையில் சிலர் தங்கள் வெற்றிக்காக முறைகேடாக ஊக்க மருந்து பயன்படுத்தும் வழக்கமும் உள்ளது. இவ்வாறு ஊக்க மருந்து பயன்படுத்துபவர்களை கண்டறிந்து அவர்கள் விளையாட தடை விதிக்கும் பணியை தேசிய ஊக்க மருந்து தடுப்பு அமைப்பு செய்து வருகிறது.
அந்த வகையில் கடந்த 2022-23ம் ஆண்டில் தேசிய ஊக்க மருந்து தடுப்பு அமைப்பு விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் மேல் நடத்திய சோதனையில் 142 இந்திய வீரர்கள், வீராங்கனைகள் ஊக்க மருந்து சோதனையில் சிக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக தடகள போட்டியில் 49 பேர் சிக்கியுள்ளனர். பளுதூக்கும் போட்டியில் 22 பேரும், மல்யுத்த போட்டியில் 17 பேரும் சிக்கியுள்ளனர்.
கிரிக்கெட் வீரர்களுக்கும் அவ்வபோது இதுபோன்ற ஊக்க மருந்து சோதனைகள் நடத்தப்படுகிறது. பிரபல இந்திய கிரிக்கெட் வீரரான ரோகித் சர்மா மீது இதுவரை 6 முறை இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. ஆனாலும் அனைத்து முறையும் அவர் ஊக்க மருந்து பயன்படுத்தவில்லை என நிரூபணமானது.
அதுபோல மற்ற இந்திய கிரிக்கெட் வீரர்கள், வீராங்கனைகளான சூர்யகுமார் யாதவ், ஜடேஜா, இஷான் கிஷன், ஹர்திக் பாண்ட்யா, ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் ஐயர், ஸ்மிருதி மந்தனா, ஹர்மன் ப்ரீத் கவுர் ஆகியோர் பரிசோதனையில் இருந்து விலக்கு கோரியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.