இதனால் சர்வதேசக் கிரிக்கெட் தொடர்களை விட உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான லீக் தொடராக மாறி வருகிறது ஐபிஎல். உலகில் கிரிக்கெட் விளையாடும் (பாகிஸ்தான் தவிர) நாட்டு வீரர்களும் இந்த தொடரில் பங்கேற்பதால் பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சம் இல்லாமல் செல்கிறது. நாளை இதன் பதினெட்டாவது சீசன் தொடங்குகிறது.
இந்நிலையில் இந்த தொடரில் இருந்து இரவு நேரத்தில் நடக்கும் போட்டிகளில் இரண்டு புதிய பந்துகளைப் பயன்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. பனிப்பொழிவைப் பொறுத்து இந்த முடிவை நடுவர் எடுப்பார் எனவும், பகலில் நடக்கும் போட்டிகளில் இந்த புதிய விதி அமல்படுத்தப் படாது எனவும் கூறப்படுகிறது. இந்த விதி பேட்ஸ்மென்களுக்கு கூடுதல் சாதகமாக அமையும் என கருத்துகளும் எழுந்துள்ளன.