ஐபிஎல் -2024 சீசன் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடந்து வருகிறது. சென்னை கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், குஜராத் டைட்டன்ஸ், சேலஞ்சர்ஸ் பெங்களூரு உள்ளிட்ட அணிகள் விளையாடி வருகின்றன.
இந்தக் கோடை காலத்தில் ரசிகர்கள் கண்டுகளித்து வரும் ஐபிஎல் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.
இந்த நிலையில், இன்ரைய லீக் போட்டியில் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியுடன், ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி மோதுகிறது.
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற தவான் முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தார்.
எனவே குஜராத் டைட்டைன்ஸ் அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது.
இரு அணிகளுக்கு இடையிலான போட்டியில் யார் ஜெயிப்பது என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.