ஆரம்பமே சிஎஸ்கே – மும்பை இந்தியன்ஸ்.. என்ன நடக்க போகுதோ – எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

Webdunia
ஞாயிறு, 19 செப்டம்பர் 2021 (10:38 IST)
ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கியுள்ள நிலையில் முதல் போட்டியே சிஎஸ்கே – மும்பை இந்தியன்ஸ் இடையே நடப்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகள் கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி நடந்து வந்த நிலையில் கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் அரபு அமீரகத்தில் தீவிர பாதுகாப்போடு ஐபிஎல் போட்டிகள் தொடங்குகின்றன.

இந்நிலையில் இன்று மாலை 7.30க்கு தொடங்கும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதிக் கொள்ள உள்ளன. முன்னதாக நடந்த போட்டிகளில் சிஎஸ்கே 7 போட்டிகளில் 5 போட்டிகளை வென்று தரவரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ளது. மும்பை இந்தியன்ஸ் 7 போட்டிகளில் 4ல் வென்று தரவரிசையில் நான்காவது இடத்தில் உள்ளது. இந்நிலையில் இன்று நடக்க உள்ள போட்டி பரபரப்புடன் எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்