ஆம், விக்கிரவாண்டி, உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடிகளில் ஒன்றாம் தேதி நள்ளிரவு முதல் சுங்கக்கட்டணம் ரூ.5 முதல் ரூ.35 வரை உயர்ந்துள்ளது. ஒரு முறை செல்லும் இலகுரக வாகனங்களுக்கு ரூ.50 வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ.55 ஆக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது வாகன ஓட்டிகள் மற்றும் போக்குவரத்துத் துறையில் உள்ளவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.