இன்னைக்கு நைட் ரைடர்ஸ் டாஸ் ஜெயிச்சா கோலி அவ்ளோதான்! – ஏன் தெரியுமா?

Webdunia
திங்கள், 12 அக்டோபர் 2020 (12:11 IST)
அரபு அமீரகத்தில் இன்று நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோத உள்ள நிலையில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் முதல் சுற்று ஆட்டங்கள் இன்றுடன் நிறைவு பெற உள்ளன. ஒவ்வொரு அணியும் சக 7 அணிகளுடன் ஆடி முடித்த நிலையில், இன்று இறுதி ஆட்டமாக கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோத உள்ளன.

இதுவரை 6 ஆட்டங்களில் விளையாடியுள்ள இரு அணிகளும் தலா 4 போட்டிகளில் வென்றுள்ளன. தரவரிசை பட்டியலில் மூன்றாவது இடத்தில் நைட் ரைடர்ஸும், 4வது இடத்தில் ராயல் சேலஞ்சர்ஸும் உள்ளனர். இன்று வெற்றி எந்த அணி அதிக என்.ஆர்.ஆர் விகிதத்தில் வெற்றி பெறுகிறதோ அதை பொறுத்து இரண்டாவது அல்லது மூன்றாவது இடத்தை பெறலாம்.

ராயல் சேலஞ்சர்ஸை பொறுத்த வரை 200க்கு மேற்பட்ட இலக்கை சேஸ் செய்வதில் இரண்டு முறை தோல்வி அடைந்திருந்தாலும், ஒருமுறை நீண்ட முயற்சியால் மும்பைக்கு எதிராக சூப்பர் ஓவர் வரை சென்று வெற்றியை ஈட்டி வந்துள்ளது நம்பிக்கையை அளிக்கிறது. முதல் சில ஆட்டங்களில் மந்தகதியாக இருந்த கேப்டன் கோலியின் பேட்டிங் கடந்த சில ஆட்டங்களில் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. டி வில்லியர்ஸ், படிக்கல், வாஷிங்டன் சுந்தர், ஃபின்ச், துபே என பேட்டிங் சைடிலும், சஹால், சைனி, ஸ்டெய்ன் என பவுலிங் சைடிலும் ஆர்சிபி நல்ல ஃபார்மில் உள்ளது.

கொல்கத்தா அணி இதுவரை ஆர்சிபிக்கு நிகரான போட்டிகள் வென்றாலும் சேஸிங் செய்த போட்டிகளில் அதிகமாக தோல்வியும், முதல் பேட்டிங் செய்த போட்டிகளில் தொடர் வெற்றிகளும் பெற்றுள்ளன. இன்று நைட் ரைடர்ஸ் டாஸ் வென்றால் முதலாவதாக பேட்டிங் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இலக்கு நிர்ணயிக்கப்பட்டுவிட்டால் நைட் ரைடர்ஸ் இலக்கிற்குள் மற்ற அணிகளை எளிதில் வீழ்த்தும் வல்லமை கொண்டதாக உள்ளது. கடந்த சில ஆட்டங்களில் தினேஷ் கார்த்திக் கேப்பிட்டன்சியும் சிறப்பாக வெளிப்பட்டுள்ளது. சுனில் நரேனுக்கு வார்னிங் கொடுக்கப்பட்டாலும் அவரது வேகப்பதை இன்று ஆர்சிபி சமாளித்தாக வேண்டும். ப்ரசித் கிருஷ்ணா, பேட் கம்மின்ஸ் ஆகியோர் விக்கெட்டை சரசரவென சரிக்க வாய்ப்பிருப்பதால் ஆர்சிபி பேட்டிங்கில் நிதானம் காக்க வேண்டியிருக்கும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்