அயர்லாந்து நாடு அறிவித்த ஆஃபர்.... வாய்ப்பு நிராகரித்த இந்திய வீரர்

Webdunia
திங்கள், 12 டிசம்பர் 2022 (22:41 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேனும், விக்கெட் கீப்பருமான சஞ்சு சாம்சங்சனுக்கு அயர்லாந்து  நாட்டு அணிக்கு தலைமை ஏற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் 2015 ஆம் ஆண்டு அறிமுகம் ஆனவர் சஞ்சு சாம்சன். இவர், இதுவரை 7 ஆண்டுகளில் 16 டி-20 போட்டிகள், 11 ஒரு நாள் போட்டிகளில் மட்டுமே  விளையாடியுள்ளார்.

இவருக்கு விளையாட வாய்ப்பு வழங்கவில்லை என புகார் கூறப்படுகிறது.

இந்த நிலையில், அயர்லாந்து  கிரிக்கெட் வாரியம் இவருக்கு, அயர்லாந்து குடியுரிமை, வீட்டு வசதி, இந்திய நட்சத்திர வீரர்களுக்கு நிகரான ஊத்யம் என சகல வசதிகளுக்கு வழங்குறோம் என சலுகை அறிவித்துள்ளது.


ALSO READ: சஞ்சு சாம்சன் இல்லையா..? இது அநியாயம்..! – ட்விட்டரில் ரசிகர்கள் ஆவேசம்!
 
ஆனால், இதை மறுத்துள்ள சஞ்சு சாம்சன்,  இந்திய கிரிக்கெட் அணியில் இருந்துதான் ஓய்வு பெறுவேன் என்று, இந்திய நாட்டின் மீதுள்ள பற்றின் காரணமாக அயர்லாந்து வாய்ப்பை மறுத்துள்ளார் அவர்.ரசிகர்கள் அவர் முடிவுக்கு பாராட்டுகள் தெரிவித்துள்ளனர்.

Edited By Sinoj

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்