சென்னையில் 'தல' தோனி...வைரலாகும் புகைப்படம்

Webdunia
சனி, 12 நவம்பர் 2022 (20:26 IST)
சென்னையில் உள்ள பிரபல இந்தியா சிமெண்ட் நிறுவனத்தின் 75 வது ஆண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக   இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்  மகேந்திர சிங் தோனி சென்னை வந்துள்ளார். இதுகுறித்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

இந்தியா சிமெண்ட் நிறுவனத்தின் 75 வது ஆண்டு விழா சென்னை கலைவாணார் அரங்கில் இன்று நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர்  அமித்ஷா, ஆளுனர் ஆர்.என்,ரவி. திமுக அமைச்சர் தங்கம் தென்னரசு, மத்திய இணை அமைச்சர் எல்.,முருகன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

இந்த நிலையில், சென்னை கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.  இந்த  நிகழ்ச்சியில் அவர் இருக்கையில் அமரிந்திருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

அடுத்தாண்டு ஐபிஎல் தொடரிலும் தோனி சென்னை கிங்ஸின் கேப்டனாகன பதவி வகிப்பார் எனக் கூறப்படுகிறது.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்