ஏற்கனவே இந்தியா முதல் இன்னிங்சில் 518 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்த நிலையில், இரண்டாவது இன்னிங்சில் இந்தியா வெற்றி பெற 121 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த நிலையில், இன்னும் 58 ரன்கள் எடுத்தால் இந்தியா வெற்றி பெறும் என்ற நிலையில் நான்காம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்துள்ளது.
முன்னதாக, மேற்கிந்திய தீவுகள் அணி முதல் இன்னிங்சில் 248 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 390 ரன்களும் எடுத்துள்ளன. நாளைய ஐந்தாம் நாள் ஆட்டத்தில் சில மணி நேரத்தில் இந்தியா வெற்றி பெற்றுவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.