டி-20 கிரிக்கெட்: ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்திய அணி!

Webdunia
புதன், 20 அக்டோபர் 2021 (19:23 IST)
டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணிக்கு  8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் வரும் அக்டோபர்  17 ஆம் தேதி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், இன்று இந்திய அணிக்கு  எதிரான பயிற்சி ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 153 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. ஆஸ்திரேலிய அணியில் ஸ்மித் 57 ரன்கள் அடித்தார். இந்திய அணி தரப்பில் அஸ்வின் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதையடுத்து இந்திய அணி பேட்டிங் செய்தது. இதில், இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. மேலும் கேப்டன் ரோஹித் சர்மா 41 பந்துகளில் 60 ரன்கள் அடித்து இந்திய அணியின் வெற்றிக்கு  உதவினார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்