சில நேரங்களில் வில்லன், காமெடியன் வேடங்களும் ஏற்கவேண்டும்… மோகன்லாலை ஒப்பிட்டு தன்னைப் பற்றி பேசிய சஞ்சு சாம்சன்!

vinoth

வெள்ளி, 26 செப்டம்பர் 2025 (08:42 IST)
நடந்து வரும் ஆசியக் கோப்பைத் தொடரில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் பேட்டிங் வரிசையைக் கொத்துக் கறி போட்டு வருகின்றனர் கேப்டன் சூர்யகுமார் யாதவ்வும், பயிற்சியாளர் கம்பீரும். ஒரு போட்டியில் மூன்றாம் இடத்தில், ஒரு போட்டியில் ஆறாம் இடத்தில் என எந்த லாஜிக்கும் இல்லாமல் அவர் விளையாட வைக்கப்படுகிறார்.

டி 20 போட்டிகளில் கடந்த ஓராண்டாக அவர் மிகச்சிறப்பாக தொடக்க ஆட்டக்காரராக விளையாடி வந்தாலும் ஷுப்மன் கில் அணிக்குள் வந்ததும் அவரின் இடம் கேள்விக்குறியாகியுள்ளது. இந்நிலையில் தன்னுடைய இடம் மாற்றப்பட்டுள்ளது குறித்துப் பேசியுள்ளார் சாம்சன்.

அதில் “40 ஆண்டுகளாக தொடர்ந்து நடித்துவரும் நடிகர் மோகன்லால் எல்லா விதமான வேடங்களிலும் நடித்து வருகிறார். நானும் கடந்த 10 ஆண்டுகளாக நாட்டுக்காக விளையாடுகிறேன். அதனால் ஹீரோவாக (தொடக்க ஆட்டக்காரராக) மட்டுமே இருப்பேன் என சொல்ல முடியாது.  சில நேரங்களில் வில்லனாகவோ அல்லது காமெடியனாகவோ இருக்க வேண்டும். அதனால் எல்லா இடங்களிலும் இறங்கி விளையாட வேண்டும்’ எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்