இறுதி போட்டிக்கு நாங்கள் தகுதியானவர்கள் தான்: பாகிஸ்தான் பயிற்சியாளர் பேட்டி..!

Mahendran

வெள்ளி, 26 செப்டம்பர் 2025 (14:17 IST)
41 ஆண்டுகளுக்குப் பிறகு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியாவுடன் மோதும் வாய்ப்பை பாகிஸ்தான் அணி பெற்றுள்ளது. இதுகுறித்து பாகிஸ்தான் அணியின் தலைமைப் பயிற்சியாளர் மைக் ஹெசன் தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
 
அவர் கூறியதாவது: "நாங்கள் இதற்கு முன் செப்டம்பர் 14 மற்றும் 21ஆம் தேதிகளில் விளையாடியதை அறிவோம். ஆனால், இறுதிப்போட்டியில் வெற்றி பெறுவதுதான் மிகவும் முக்கியம். நாங்கள் சிறப்பாக விளையாட முயற்சிப்போம். இந்த போட்டிக்கு நாங்கள் தகுதியானவர்கள். இந்த வாய்ப்பை சிறப்பாகப் பயன்படுத்திக்கொள்வோம்" என்று தெரிவித்தார்.
 
"இதுவரை நடந்த அனைத்துப் போட்டிகளிலும் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் விளையாடினோம். நாங்கள் கிரிக்கெட்டில் மட்டுமே முழுமையாக கவனம் செலுத்தி வருகிறோம்" என்றும் அவர் குறிப்பிட்டார்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்