வெளிநாட்டு தொடர்களில் எங்களை விளையாட அனுமதிக்க வேண்டும் – பிசிசிஐ-க்கு எதிராக சுரேஷ் ரெய்னா கருத்து!

Webdunia
திங்கள், 11 மே 2020 (08:46 IST)
பிசிசிஐ ஆண்டு ஒப்பந்தத்தில் இல்லாத வீரர்களை வெளிநாடுகளில் நடக்கும் தொடர்களில் விளையாட அனுமதிக்க வேண்டும் என இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் நடுவரிசை ஆட்டக்காரரான சுரேஷ் ரெய்னா கடந்த 2 ஆண்டுகளாக அணியில் இடம் கிடைக்காமல் போராடி வருகிறார். அதனால் பிசிசிஐ உடனான அவரது ஆண்டு ஒப்பந்தமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஐபிஎல் மற்றும் ராஞ்சி போட்டிகள் போன்றவற்றில் மட்டுமே அவர் விளையாடி வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் இர்பான் பதானுடன் அவர் நடத்திய இன்ஸ்டாகிராம் உரையாடலில் அவர் முக்கியமான கருத்து ஒன்றை அவர் தெரிவித்துள்ளார். அதில் ‘இந்திய வீரர்களை ஓய்வு பெறும் வரை பிசிசிஐ வெளிநாட்டு தொடர்களில் விளையாட அனுமதிப்பதில்லை. ஆனால் மற்ற நாட்டு வீரர்கள் இதுபோல நிறைய தொடர்களில் விளையாடுகிறார்கள். அதனால் அவர்களுக்கு நல்ல அனுபவம் கிடைத்து அணிக்கு திரும்புகிறார்கள்.

நாங்கள் உள்ளூர் தொடர்களில் மட்டும் விளையாடுவதால் மாற்றுத் திட்டம் இல்லை. கரீபியன் பிரீமியர் லீக், ஆஸ்திரேலியாவின் பிக் பேஷ் போன்ற தொடர்களில் விளையாடுவதன் மூலம் எங்கள் திறமையை நிரூபித்து சர்வதேச போட்டிகளுக்குத் தயாராக இருக்க முடியும். ‘ எனக் கூறியுள்ளார். மேலும் அத்தகையை போட்டிகளில் விளையாடுவதன் மூலம் வீரர்களின் வருவாயும் கூடும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்