டெஸ்ட் கேப்டனாக பொறுப்பேற்க ரோஹித்துக்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை… கவாஸ்கர் கருத்து!

Webdunia
செவ்வாய், 18 ஜனவரி 2022 (15:12 IST)
இந்திய டெஸ்ட் அணிக்கு கேப்டனாக ரோஹித் ஷர்மாவை நியமிப்பது சரியான முடிவில்லை என சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.

இந்திய அணிக்கு கடந்த 7 ஆண்டுகளாக டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து இந்திய அணியை பல சாதனைகளைப் படைக்க வழிவகுத்தவர் விராட் கோலி. ஆனால் கடந்த சில மாதங்களாக அவருக்கும் பிசிசிஐக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், டி20 அணிக் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார். அதன் பின்னர் ஒரு நாள் கேப்டன் பொறுப்பும் அவரிடம் இருந்து பறிக்கப்பட்டது.

இந்நிலையில் இப்போது அவர் அதிர்ச்சியளிக்கும் விதமாக சில தினங்களுக்கு முன்னர் டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்தும் விலகினார். இது ரசிகர்கள் மட்டும் கிரிக்கெட் வீரர்கள் மத்தியிலேயெ மிகப்பெரிய அளவில் அதிர்வுகளை உருவாக்கியுள்ளது. இந்நிலையில் இந்திய டெஸ்ட் அணிக்கு அடுத்து கேப்டனாக நியமிக்கப்பட போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இப்போது துணைக் கேப்டனாக இருக்கும் ரோஹித் ஷர்மா, கே எல் ராகுல் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோரின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளதாக சொல்லப்படுகிறது. புதிய கேப்டன் குறித்து பேசியுள்ள இந்திய முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் ‘ரோஹித் ஷர்மாவுக்கு அடிக்கடி காயம் ஏற்படுகிறது. அவர் வேகமாக ரன்கள் எடுக்க ஓடும் போது அவரின் காயம் மீண்டும் வெளிப்படலாம். அதனால் மூன்று வகையான வடிவங்களிலும் விளையாட தகுதியுள்ள ஒருவர் கேப்டனாக பொறுப்புக்கு வரலாம்.’ என ரோஹித் ஷர்மா கேப்டனாக நியமிக்கப்படுவதற்கு எதிரான கருத்தை தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்