புஜாராவுக்கு கூட கிடைக்காத சலுகை கில்லுக்கு கிடைக்கிறது… அனில் கும்ப்ளே கருத்து!

vinoth

செவ்வாய், 30 ஜனவரி 2024 (14:05 IST)
கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக தொடர்ச்சியாக சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறார் இந்திய அணியின் இளம் பேட்ஸ்மேன் ஷுப்மன் கில். இதன் மூலம் ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசையில் நம்பர் 1 பேட்ஸ்மேனாக கடந்த வருடத்தின் பெரும்பாலான நாட்கள் இடம்பிடித்திருந்தார்.

இந்திய அணி சார்பில் மூன்று வடிவிலான போட்டிகளிலும் விளையாடும் சில வீரர்களில் ஷுப்மன் கில்லும் ஒருவர். ஆனால் ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகள் அளவுக்கு இன்னும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் இன்னும் தன்னுடைய ஃபார்மை கண்டுபிடிக்கவில்லை. புஜாராவின் இடத்தில் விளையாடும் அவர் கடந்த 11 இன்னிங்ஸ்களாக ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை.

இந்நிலையில் அவரின் மோசமான ஃபார்ம் குறித்து பேசியுள்ள அனில் கும்ப்ளே “ஷுப்மன் கில் விசாகப்பட்டிணத்தில் நடக்கும் டெஸ்ட்டில் சிறப்பாக விளையாட வேண்டும். சுழல் பந்து வீச்சாளர்களுக்கு எதிராக அவர் ஒரு வியூகத்துடன் வரவேண்டும். அதற்கு பயிற்சியாளர் டிராவிட் உதவ வேண்டும். 100 டெஸ்ட்களுக்கு மேல் விளையாடிய புஜாராவின் இடத்தில் நீண்ட காலமாக கில் விளையாடிவருகிறார். அவருக்குக் கூட கிடைக்காத சலுகைகள் கில்லுக்கு கிடைத்து வருகின்றன. அவர் சிறப்பாக விளையாடவில்லை என்றால் அவர் மேல் அழுத்தம் அதிகமாகும்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்