இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் வந்துள்ள இங்கிலாந்து அணி டி 20 மற்றும் ஒரு நாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. நடந்து முடிந்த டி 20 தொடரில் அபாரமாக விளையாடிய இந்திய அணி 4-1 என்ற கணக்கில் வென்றது. இதையடுத்து நேற்று நாக்பூரில் முதல் ஒருநாள் போட்டி பகலிரவு ஆட்டமாக நடைபெற்றது.
இந்த போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. போட்டியைக் காண ஆவலாக வந்த ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சியாக விராட் கோலி இந்த போட்டியில் ஆடமாட்டார் என்ற அறிவிப்பு வந்தது. அவருக்கு முழங்காலில் ஏதோ வீக்கம் இருப்பதாக கேப்டன் ரோஹித் ஷர்மா தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் போட்டி முடிந்ததும் பேசிய கில் “விராட் முதல் நாள் வரை வலைப்பயிற்சியில் ஈடுபட்டார். போட்டி அன்றுதான் அவருக்கு வீக்கம் இருப்பது கண்டறியப்பட்டது. அதனால் அவர் ஓய்வெடுத்துக் கொண்டார். அவருக்குப் பெரிய பிரச்சனை எதுவும் இல்லை. கண்டிப்பாக அவர் இரண்டாவது போட்டியில் களமிறங்குவார்” எனக் கூறியுள்ளார்.