ஒழுங்கு நடவடிக்கையாக ஷுப்மன் கில் இந்திய அணியில் இருந்து விடுவிப்பு… பிசிசிஐ அதிரடி!

vinoth

ஞாயிறு, 16 ஜூன் 2024 (06:50 IST)
நடந்துவரும் டி 20 உலகக் கோப்பை தொடரின் லீக் போட்டிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறும் அணிகள் கிட்டத்தட்ட முடிவாகிவிட்டன. ஏ பிரிவில் இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய அணிகள் முன்னேறியுள்ளன. இந்நிலையில் இந்திய அணி லீக் போட்டியில் ஆடவிருந்த கடைசி போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்திய அணிக்கு ரிசர்வ் வீரர்களாக அறிவிக்கப்பட்டிருந்த ஷுப்மன் கில் மற்றும் ஆவேஷ் கான் ஆகியோர் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அவர்கள் அமெரிக்காவில் இருந்து விரைவில் நாடு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஷுப்மன் கில் அமெரிக்காவில் அணியோடு இல்லாமல் வெளியில் ஊர்சுற்றி வந்ததால் அவர் மேல் ஒழுங்கு நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஷுப்மன் கில் சச்சின் டெண்டுல்கரின் மகளான சாரா டெண்டுல்கரை காதலிப்பதாக சொல்லப்படுகிறது. உலகக் கோப்பை தொடரைக் காணவந்த அவரோடு கில் அங்கு ஊர் சுற்றிப் பார்த்ததாகவும் அதனால் அவர் மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்