அப்படி ஒரு போட்டிதான் பாகிஸ்தான் அணியை அமெரிக்க அணி வீழ்த்தியது. இதனால் பாகிஸ்தான் அணி சூப்பர் 8க்கு செல்வது சிக்கலானது. மேலும் பாகிஸ்தான் அணி இந்தியாவிடமும் தோற்றது. இந்நிலையில் அமெரிக்கா மற்றும் அயர்லாந்து ஆகிய அணிகளுக்கு இடையிலான போட்டி மழைக் காரணமாக கைவிடப்பட்டதால் பாகிஸ்தான் அணி சூப்பர் 8 க்கு செல்லும் வாய்ப்பை முழுவதுமாக இழந்துள்ளது. முதல் முறையாக உலகக் கோப்பை தொடரில் பங்கேற்ற அமெரிக்க அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இந்த வெளியேற்றத்தை இந்திய கிரிக்கெட் ரசிகர்க “பை பை பாகிஸ்தான்” என்ற டேக்லைனை உருவாக்கி கொண்டாடி வருகின்றனர். அதற்குக் காரணம் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் சமூகவலைதளப் பக்கம்தான். ஏனென்றால் 2022 ஆம் ஆண்டு இதே போல இந்திய அணி அரையிறுதியோடு வெளியேறிய போது அந்த அணியின் அதிகாரப்பூர்வ சமூகவலைதளப் பக்கத்தில் “பை பை இந்தியா” என்ற பதிவு வெளியாகி இந்திய ரசிகர்களின் கோபத்துக்கு ஆளாகி இருந்தது. அதற்கு இப்போது பழிவாங்கும் விதமாக இந்த டேக்லைன் உருவாக்கப்பட்டு பரப்பப்பட்டு வருகிறது.