இந்நிலையில் வெளியாகியுள்ள வானிலை அறிக்கையின் படி போட்டி நடக்கும் நேரத்தில் (அமெரிக்காவில் காலை 10.30 மணி) மழையளவு குறைவாகவே இருக்கும் என்றும் ஆனால் அதற்கு மூன்று மணிநேரம் முன்புவரை நல்ல மழை பெய்யும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த மைதானத்தில் இருந்து மழைநீரை வெளியேற்றும் பணிகள் தாமதம் ஆவதால் போட்டி மழையால் பாதிக்கப்பட கணிசமான வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.