டெஸ்ட் அணியில் கோலியின் இடத்தைக் கைப்பற்றும் ஷுப்மன் கில்?

vinoth

வெள்ளி, 23 மே 2025 (14:32 IST)
அண்மைய நாட்களாக கிரிக்கெட் உலகில் அதிகம் விவாதிக்கப்பட்டு வருவது இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியின் திடீர் டெஸ்ட் ஓய்வு முடிவுதான். 36 வயதாகும் அவர் கடந்த வாரம் ஓய்வு முடிவை அறிவித்த போது ரசிகர்களுக்கு அதிர்ச்சியான ஒன்றாக அமைந்தது. கோலியின் இந்த திடீர் அறிவிப்புக்கு என்ன காரணம் என ரசிகர்கள் குழம்பி வருகின்றனர்.

ஏனென்றால் கோலியால் இன்னும் நான்கு ஆண்டுகளாவது டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடி இருக்க முடியும். தற்போது டி 20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து கோலி ஓய்வு பெற்று விட்டதால் கோலி ஒருநாள் போட்டிகளில் மட்டுமே கவனம் செலுத்துகிறார். இதன் காரணமாக ஜூன் மாதம் இங்கிலாந்து செல்லும் இந்திய அணியில் கோலி இல்லாமல் இருப்பது இங்கிலாந்து ரசிகர்களுக்கே உவப்பானதாக அமையவில்லை.

ரோஹித் ஷர்மா மற்றும் கோலி ஆகியோர் ஒரே நேரத்தில் ஓய்வை அறிவித்துள்ளதால் இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் இரண்டு இடங்கள் காலியாகியுள்ளன. அதை யார் யார் நிரப்பப் போகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் தொடக்க ஆட்டக்காரராக இனிமேல் கே எல் ராகுல் விளையாடுவார் என சொல்லப்படுகிறது. அதே போல மூன்றாவது வீரராகக் களமிறங்கி வந்த ஷுப்மன் கில் இனிமேல் விராட் கோலியின் நான்காவது பேட்ஸ்மேன் இடத்தில் விளையாடுவார் என சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்