ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கியுள்ள நிலையில் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சதமடித்து அசத்தியுள்ளார். தற்போதைய டி 20 போட்டிகளில் வீரர்கள் விதவிதமான ஷாட்களைக் கண்டறிந்து விளையாடி வருகிறார்கள். ஆனால் சாய்சுதர்சன் பழைய டெஸ்ட் கால பேட்ஸ்மேன்கள் போன்ற ஒரு மரபான வீரர். மரபான ஷாட்களை மட்டுமே ஆடி ரன்களை சேர்த்து வருவது அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் சாய் சுதர்சனை இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் சிலாகித்துள்ளார். அதில் “விராட் கோலிக்குப் பிறகு ஒருவரின் பேட்டிங்கை நான் ரசித்துப் பார்க்கிறேன் என்றால் அது சாய் சுதர்சன் பேட்டிங்தான். ” எனக் கூறியுள்ளார். முன்னதாக இந்தியாவுக்காக மூன்று விதமான போட்டிகளிலும் விளையாடும் திறன் கொண்டவர் சாய் சுதர்சன் என்று அவர் பாராட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.