என் சதம் முக்கியமில்ல.. அடிச்சு தூள் கிளப்பு – அணி வீரருக்கு உத்வேகம் கொடுத்த ஸ்ரேயாஸ் ஐயர்!

vinoth

புதன், 26 மார்ச் 2025 (08:00 IST)
18 ஆவது ஐபிஎல் சீசன் கோலாகலமாக தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகின்றது. நேற்று நடந்த போட்டியில்  குஜராத் மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின. இந்த போட்டியில் பஞ்சாப் அணி முதலில் பேட் செய்து 20 ஓவர்களில் 243 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் அபாரமாக ஆடி 42 பந்துகளில் 97 ரன்கள் சேர்த்தார்.

அதன் பின்னர் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணி பஞ்சாப் அணிக்குக் கடுமையான போட்டியைக் கொடுத்தது. கடைசி வரை போராடி 20 ஓவர்களில் 232 ரன்கள் சேர்த்து நூலிழையில் தோல்வியைத் தழுவியது. இந்த போட்டியில் பஞ்சாப் அணிக் கேப்டன் செய்த ஒரு செயல் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

பஞ்சாப் தங்கள் பேட்டிங்கின் போது 19 ஓவர் முடிவில் இருந்த போது ஸ்ரேயாஸ் சதத்தை நெருங்கியிருந்தார். ஆனால் 20 ஆவது ஓவரில் அவர் ஆடாமுனையில் இருந்தார். ஆடும் முனையில் இருந்த ஷஷாங்க் சிங்கிடம் அவர் “என்னுடைய சதம் பற்றிக் கவலைப்படாதே. நீ அடித்து ஆடு” என சொல்லியுள்ளார். இதை ஏற்று அவரும் அடித்து ஆட ஸ்ரேயாஸ் சதமடிக்க முடியாமல் போனது. ஆனாலும் தன்னலமற்ற இந்த செயலுக்காக ஸ்ரேயாஸ் ஐயருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்