ஐபிஎல் தொடரில் ரசிகர்கள் விரும்பிப் பார்க்கும் போட்டிகளில் ஒன்று சென்னை மற்றும் பெங்களுரு அணிகள் மோதும் போட்டி. இந்த நிலையில், சிஎஸ்கே அணி அடுத்ததாக பெங்களூரு அணியுடன் வரும் 28ஆம் தேதி மோதுகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ள இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 11 மணியளவில் தொடங்கியது.
இதுவரை நடந்துள்ள போட்டிகளில் சிஎஸ்கே மற்றும் பெங்களூர் ஆகிய இரண்டு அணிகளுமே தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ள நிலையில், கோலி மற்றும் தோனி இருக்கும் அணிகள் மோதும் போட்டியில் எந்த அணி இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்யவுள்ளது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.