ஆசியாவில் கிரிக்கெட் விளையாடும் நாடுகளைக் கொண்டு இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை ஆசியக் கோப்பை தொடர் நடத்தப்பட்டு வருகிறது, இதன் அடுத்த சீசன் செப்டம்பர் மாதம் ஆறாம் தேதி தொடங்கி பத்தொன்பதாம் தேதி வரை நடக்கவுள்ளது. இதற்காக அணிகள் தயாராகி வருகின்றன.
இந்நிலையில் இத்தொடருக்கான இந்திய அணி ஆகஸ்ட் 19 ஆம் தேதி அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகிய இருவரும் இடம்பெறப் போவதில்லை என்ற தகவல் பரவி வருகிறது. சமீபகாலமாக இவர்கள் இருவரும் சிறப்பாக செயல்பட்டும் அவர்கள் வழக்கமாக விளையாடும் இடங்களில் விளையாட வேறு வீரர்கள் உள்ளனர் என்பதால் அவர்களுக்கான இடம் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.