ஷமியின் பெயர் பட்டியலில் சேர்ப்பு: பிசிசிஐ அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 23 மார்ச் 2018 (11:04 IST)
பிசிசிஐ  இந்திய வீரர்களின் ஒப்பந்த பட்டியலில் ஷமியின் பெயரை ’பி’கிரேடில் சேர்த்துள்ளது.

 
 
இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஷமி, அவரது மனைவி புகார் அடிப்படையில் கொல்கத்தா போலீஸார் ஷமி மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்குகள் மீதான விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது. 
 
ஷமியின் மனைவி, தென் ஆப்ரிக்கா போட்டிக்கு பிறகு ஷமி துபாய்க்கு பாகிஸ்தான் பெண் இருவரை சந்திக்க சென்றதாகவும், அதன் பின்னணியில் சூதாட்டம் இருக்க கூடும் என புகார் அளித்திருந்தார். 
 
இதனால் பிசிசிஐ அவரின் பெயரை ஒப்பந்த பட்டியலில் சேர்க்கவில்லை. அத்துடன் பிசிசிஐ தலைவர் அவரின் மீது விசாரணை நடத்த சிஓஏ வினோத் ராய்யை நியமித்தார்.
 
இந்நிலையில், வினோத் ராய், ஷமி சூதாட்டத்தில் ஈடுபடவில்லை என்றும், அவர் மீது இனிமேல் விசாரணை நடத்த தேவையில்லை என்றும் தெரிவித்தார். இதனால் பிசிசிஐ  இந்திய வீரர்களின் ஒப்பந்த பட்டியலில் அவரை பி கிரேடில் சேர்த்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்