மீண்டும் அணிக்கு திரும்பிய ஷாகிப் அல் ஹசன்

Webdunia
வியாழன், 15 மார்ச் 2018 (16:55 IST)
இலங்கை அணிக்கு எதிரான டி20 போட்டியில் பங்கேற்க  வங்காளதேச அணியின்  கேப்டன் ஷாகிப் அல் ஹசன் மீண்டும் அணியில் இணைந்துள்ளார்.
 
கடந்த ஜனவரி மாதம் வங்காளதேசத்தில் நடைபெற்ற இலங்கை, ஜிம்பாப்வே முத்தரப்பு போட்டியின் இறுதி போட்டியில் ஷாகிப் அல்  ஹசனுக்கு காயம் ஏற்பட்டது. இதனால் அவர் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்தார். அதனால் நடைப்பெற்று கொண்டிருக்கும் முத்தரப்பு போட்டியில் அவர் பங்கேற்கவில்லை.
 
இந்நிலையில், நாளை நடைபெறும்  டி20 போட்டியில் வங்காளதேச அணி இலங்கை  அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் வங்காளதேச அணி வெற்றி பெற்றால் மட்டுமே இறுதிப்போட்டிக்கு செல்ல முடியும். இதனால் ஷாகிப் அல் ஹசன் நாளை நடைபெறவுள்ள போட்டியில் கலந்து கொள்ள உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்