சென்னை புழல் சிறையில் வெடிகுண்டு மிரட்டல்.. மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனை.

Siva

ஞாயிறு, 15 டிசம்பர் 2024 (07:21 IST)
சென்னை புழல் சிறையில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து, வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் புழல் சிறைக்குள் தீவிர சோதனை நடத்தியதாக வெளிவந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில மாதங்களாகவே முக்கிய பகுதிகளில் வெடிகுண்டு வெடிக்கும் என போலியான தகவல் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. முதல்வர் அலுவலகம், கவர்னர் அலுவலகம், திரையரங்குகள், மருத்துவமனைகள், பள்ளி-கல்லூரிகள் உள்ளிட்ட பல இடங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்தது குறிப்பிடத்தக்கது.

அதேபோல், சமீபத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் தாஜ்மஹால் உள்ளிட்ட பகுதிகளிலும் வெடிகுண்டு மிரட்டல் ஏற்பட்டது. தற்போது, அடுத்த கட்டமாக புழல் சிறையில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மர்ம நபர் செல்போன் மூலம் மிரட்டல் விடுத்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த மர்ம அழைப்பில், புழல் சிறையில் வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறப்பட்டது. இதையடுத்து, வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் காவல்துறையினர் புழல் சிறைக்குள் தீவிர சோதனை செய்தனர்.

இந்த சோதனையின் பின்னர், ஆபத்தான பொருள் எதுவும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. மிரட்டல் விடுத்த நபர் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். செல்போன் சிக்னல் மூலம் அந்த நபரை கண்டறியும் பணியில் காவல்துறை தீவிரமாக செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.


Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்