இந்த தொடர் குறித்து பேசிய நெட்பிளிக்ஸின் தலைமை செயல் அதிகாரி இந்த தொடர் உலக அளவில் பிரம்மாண்டமாக ரசிகர்களை சென்று சேரும். ஆங்கிலமல்லாத தொடர்களில் நம்பர் ஒன் சீரிஸாக மாறும் எனக் கூறியுள்ளார். வெளியானதில் இருந்து சுமார் 11 கோடி பேரால் நெட்பிளிக்ஸ் தளத்திலேயே பார்க்கப்பட்டுள்ளதாம். இதையடுத்து டிசம்பர் 26 அன்று இரண்டாம் பாகம் ரிலீஸாகவுள்ளது.
சமீபத்தில் டீசர் வெளியாகி கவனம் பெற்றது. முதல் சீசனில் விளையாடி பணத்தை வென்ற நபர் மீண்டும் அதே விளையாட்டை உள்ளே வர என்னென்ன திருப்பங்கள் நடக்கின்றன என்பதை விறுவிறுப்பாக சொல்லும் சீசனாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சீரிஸ் பற்றி பேசியுள்ள இயக்குனர் ஹ்வாங் டோங் ஹ்யூக் ஸ்க்விட் கேம்ஸ் மூன்றாவது சீசனோடு நிறைவு பெறும். மூன்றாவது சீசன் அடுத்த ஆண்டில் ரிலீஸாகும் எனக் கூறியுள்ளார்.