இரண்டாவது டெஸ்ட்டும் சொதப்பல்.. 83 ரன்களுக்கு 5 விக்கெட்! தடுமாறும் இந்தியா!

Prasanth Karthick
வெள்ளி, 25 அக்டோபர் 2024 (11:03 IST)

முதல் டெஸ்ட் போட்டியில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது போலவே இரண்டாவது டெஸ்ட்டிலும் தற்போது இந்தியா தடுமாறி வருகிறது.

 

 

இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்ற நிலையில், மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் வென்றால்தான் இந்திய அணி உலக டெஸ்ட் கோப்பைக்கு தகுதி பெறும் வாய்ப்புகள் பிரகாசமாகும்.

 

இந்நிலையில் நேற்று தொடங்கிய இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 79.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 259 ரன்களை குவித்தது. இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி விளையாட தொடங்கியுள்ளது.
 

ALSO READ: வார்னருக்கு வாழ்நாள் தடை நீக்கம்! புஷ்பா back on fire! - மீண்டும் கேப்டன் ஆவாரா?
 

பேட்டிங் தொடங்கி 30 ஓவர்கள் முடிந்துள்ள நிலையில் 85 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்துள்ளது இந்திய அணி. முதலில் ரோஹித் சர்மா டக் அவுட் ஆன நிலையில், விராட் கோலி 1 ரன்னில் அவுட் ஆனார், ஜெய்ஸ்வாலும், சுப்மன் கில்லும் தலா 30 ரன்கள் அடித்து அவுட் ஆனார்கள். 

 

கடந்த டெஸ்ட்டில் சிறப்பாக விளையாடிய ரிஷப் பண்ட் இந்த போட்டியில் 18 ரன்களில் அவுட் ஆனார். இதனால் இந்திய அணி தற்போது 5 விக்கெட்டுகளை இழந்து 85 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. நியூசிலாந்தின் 259 என்ற ஸ்கோரை இந்திய அணி வீழ்த்துவது என்பது இதனால் கடினமாகியுள்ளதுடன், இரண்டாவது டெஸ்ட் வெற்றியும் இந்தியாவிற்கு எட்டாக்கனியாக மாறி வருகிறது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்