36 வருடங்களுக்குப் பிறகு நியுசிலாந்துக்குக் கிடைத்த வெற்றி… 19 வருடங்களுக்குப் பிறகு இந்தியா அடைந்த தோல்வி!

vinoth

ஞாயிறு, 20 அக்டோபர் 2024 (13:32 IST)
இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி பெங்களூருவின் சின்னசாமி மைதானத்தில் தொடங்கியது.  இந்தப் போட்டியில்  முதல் நாள் முழுவதும் மழையால் பாதிக்கப்பட்ட நிலையில் இரண்டாம் நாளில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. அதிர்ச்சியளிக்கும் விதமாக முதல் இன்னிங்ஸில் 46 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து அதிர்ச்சியை அளித்தது.

பின்னர் விளையாடிய நியூசிலாந்து 462 ரன்களை குவித்தது. இதனால் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 356 ரன்கள் பின்தங்கியது. தொடர்ந்து இரண்டாம் இன்னிங்ஸை ஆடிய இந்திய சிறப்பாக விளையாடி ரன்களைக் குவித்தது. கோலி, சர்பராஸ் கான் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் சிறப்பாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். ஆனால் பின்வரிசை வீரர்கள் சொதப்பியதால் இந்திய அணி 462 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணியில்  சர்ப்ராஸ் கான் 150 ரன்களும், ரிஷப் பண்ட் 99 ரன்கள் சேர்த்தனர்.

இதனால் நியுசிலாந்து அணிக்கு 107 ரன்கள் என்ற எளிய நிர்ணயிக்கப்பட்டது. இதையடுத்து  நான்காவது இன்னிங்ஸை ஆடிய நியுசிலாந்து ஆரம்பத்தில் 2 விக்கெட்டுகளை இழந்தாலும் பின்னர் நிதானமாக விளையாடி 110 ரன்களை குவித்து முதல் வெற்றியை கைப்பற்றியது. இதன்மூலம் டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் நியூசிலாந்து முன்னணி வகிக்கிறது.

இதன் மூலம் 36 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய மண்ணில் நியுசிலாந்து அணி தங்கள் டெஸ்ட் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. அதே போல இந்திய அணி பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் 19 ஆண்டுகள் கழித்து ஒரு டெஸ்ட் போட்டியை தோற்றுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்