பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கு கொரோனா – மருத்துவமனையில் அனுமதி

Webdunia
செவ்வாய், 28 டிசம்பர் 2021 (09:51 IST)
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு ஆணையத்தின் தலைவர் சவுரவ் கங்குலிக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் மெல்ல குறைந்து வரும் நிலையில் ஒமிக்ரான் வேரியண்ட் பாதிப்புகள் அதிகரித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் பிசிசிஐ தலைவரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான சவுரவ் கங்குலிக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

இதனால் கொல்கத்தாவில் உள்ள உட்லண்ட்ஸ் மருத்துவமனையில் கங்குலி அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த செய்தி கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்