பவுலர்கள் கோலியைக் காப்பாற்றி விட்டார்கள்… ஆட்டநாயகன் விருது அவருக்கா?.. வன்மத்தைக் கக்கிய முன்னாள் வீரர்!

vinoth

செவ்வாய், 2 ஜூலை 2024 (07:19 IST)
17 ஆண்டுகளுக்குப் பிறகு டி 20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்று சாதனை படைத்துள்ளது. உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் இந்திய அணி தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒரு தீரில்லர் படம் போல சென்ற அந்த போட்டியில் இந்திய அணி பவுலர்கள் அபாரமாக செயல்பட்டு வெற்றியை வசப்படுத்தினர்.

இந்த தொடரில் ஆரம்பம் முதலே சொதப்பி வந்த கோலி, இறுதி போட்டியில் நிதானமான ஒரு இன்னிங்ஸை கட்டமைத்து இந்திய அணியின் வெற்றியின் முக்கியக் காரணமாக அமைந்தார். அவர் 59 பந்துகள்  சந்தித்து 76 ரன்கள் சேர்த்தார். ஆரம்பத்தில் அதிரடியாக ஆடிய அவர் தொடர்ந்து மூன்று விக்கெட்கள் இழந்ததும் நிதானத்தைக் கையில் எடுத்தார். பின்னர் இறுதிகட்டத்தில் அதிரடியாக ஆடி அவுட் ஆனார். அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

இந்நிலையில் கோலி ஆட்டநாயகன் விருதுக்கு தகுதியானவர் இல்லை என வர்ணனையாளர் சஞ்சய் மஞ்சரேக்கர் தெரிவித்துள்ளார். அதில் “கோலி அதிக பந்துகளை எடுத்துக் கொண்டதால் ஹர்திக் பாண்ட்யா 2 பந்துகளை மட்டுமே சந்திக்க முடிந்தது. அவரின் ஆட்டத்தால் அணி நெருக்கடிக்குத் தள்ளப்பட்டது. பவுலர்கள் சரியாக பந்துவீசவிலலி என்றால் நான் சொன்னது சரியாக இருந்திருக்கும். கோலி பாதி ஓவர்கள் விளையாடி 128 ஸ்ட்ரைக் ரேட்டில்தான் ஆடியிருந்தார். நானாக இருந்தால் பவுலர்களில் ஒருவருக்குதான் ஆட்டநாயகன் விருது கொடுத்திருப்பேன்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்