இன்ஸ்டாவில் சாதனை படைத்த கோலியின் ஒற்றைப் புகைப்படம்!

vinoth

திங்கள், 1 ஜூலை 2024 (08:38 IST)
17 ஆண்டுகளுக்குப் பிறகு டி 20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்று சாதனை படைத்துள்ளது. உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் இந்திய அணி தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தி பரபரப்பான போட்டியின் முடிவில் இரண்டாவது முறையாக சாம்பியன் ஆனது.

கிட்டத்தட்ட 11 ஆண்டுகளாக இந்திய அணி எந்தவொரு ஐசிசி கோப்பையையும் வென்றதில்லை. இதனால் கடுமையான விமர்சனங்களைப் பெற்ற இந்திய அணிக்கு இந்த வெற்றி பெறும் ஆறுதலாக அமைந்துள்ளது. ரோஹித், கோலி மற்றும் ஜடேஜா ஆகியோர் ஓய்வை அறிவித்துள்ள நிலையில் அவர்கள் வெற்றிக் கோப்பையோடு செல்வது ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியான ஒன்றாக அமைந்துள்ளது. இந்திய அணிக்கு பிசிசிஐ 125 கோடி ரூபாய் பரிசுத்தொகை அறிவித்துள்ளது.

இந்த போட்டியை வென்ற பின்னர் வீரர்கள் மிகவும் எமோஷனலாக கோப்பையைக் கையில் ஏந்தி வெற்றியைக் கொண்டாடினர். அப்படி விராட் கோலி கோப்பையோடு வெளியிட்ட புகைப்படம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிட்டத்தட்ட 1.7 கோடி லைக்குகளைப் பெற்று சாதனை படைத்துள்ளது. இந்தியாவில் அதிகம் பேரால் லைக் செய்யப்பட்ட புகைப்படமாக இந்த பதிவு சாதனை படைத்துள்ளது. 

 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Virat Kohli (@virat.kohli)

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்