தோற்றுவிட்டால் கம்பீர் சிறுகுழந்தை போல அழுவார்… சிறு வயது பயிற்சியாளர் பகிர்ந்த தகவல்!

vinoth
செவ்வாய், 6 ஆகஸ்ட் 2024 (16:28 IST)
IPL டி 20  கோப்பையை வென்ற மகிழ்ச்சியோடு கொல்கத்தா அணியின் ஆலோசகர் பொறுப்பில் இருந்து விலகிக் கொண்டார் கவுதம் கம்பீர்.  இதையடுத்து இதையடுத்து இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக கவுதம் கம்பீர் பொறுப்பேற்றுக் கொண்டு இலங்கைக்கு எதிரான தொடரில் தனது பயணத்தைத் தொடங்கியுள்ளார்.

அதில் டி 20 தொடரை இந்திய அணி வென்ற நிலையில் ஒருநாள் தொடரில் பின்னடவை சந்தித்துள்ளது. இந்நிலையில் கம்பீரைப் பற்றி அவரின் சிறுவயது பயிற்சியாளராக இருந்த சஞ்சய் பரத்வாஜ் சுவாரஸ்யமான தகவலைப் பகிர்ந்துள்ளார்.

அதில் “கம்பீரை எல்லோரும் ஆக்ரோஷமானவராக பார்க்கின்றனர். ஆனால் அவர் ஒரு சிறு குழந்தை போல. அவர் உள்ளத்தில் எந்த வன்மமும் கோபமும் இருக்காது. அவரின் ஆக்ரோஷம் எல்லாம் போட்டியை வெல்ல வேண்டும் என்பதில்தான் இருக்கும். அவரின் நட்பு வட்டத்துக்குள் சென்றுவிட்டால், எப்போதும் சிரித்துக் கொண்டேதான் இருப்பார். சிறுவயதில் அவர் போட்டியில் தோற்றுவிட்டால் அழுவார். அதே போன்ற குழந்தையாகதான் இப்போதும் அவர் இருக்கிறார். அவர் தூய்மையான இதயத்தைக் கொண்டவர். பல இளம் வீரர்களை அவர் உருவாக்கியுள்ளார்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்