சச்சினின் சாதனையை ரூட்டால் முறியடிக்க முடியுமா?... ரிக்கி பாண்டிங் கருத்து!

vinoth

சனி, 26 ஜூலை 2025 (10:25 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் நான்காவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் ட்ரஃபோட் மைதானத்தில்  தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் சதமடித்த ஜோ ரூட் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் சேர்த்த வீரர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். அவர் மொத்தமாக 13,379 ரன்கள் சேர்த்துள்ளார்.

இந்த போட்டியில் 150 ரன்கள் சேர்த்ததின் மூலம் ரூட், பாண்டிங், காலிஸ், ராகுல் டிராவிட் ஆகியோரை முந்தி சச்சினுக்கு அடுத்து இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். முதலிடத்தில் சச்சின் 15,921 ரன்களோடு உள்ளார். இந்நிலையில் தன்னுடைய சாதனையை முறியடித்துள்ள ஜோ ரூட்டை ஆஸி முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பாராட்டியுள்ளார்.

அதில் “கடந்த சில ஆண்டுகளாக ஜோ ரூட்டின் ரன் சேர்க்கும் ஆர்வம் அதிகரித்து வருகிறது. அவரால் சச்சினின் சாதனையை முறியடிக்க முடியுமா என தெரியவில்லை. அவருக்கு இப்போது 34 வயதுதான் ஆகிறது. அவரால் அதனை செய்ய முடியும் என்றுதான் நினைக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்