இன்னும் 18 ரன்கள் தான்.. சுப்மன் கில் நிகழ்த்த இருக்கும் சாதனை.. ஜடேஜா அதிவேக அரைசதம்..!

Mahendran

வியாழன், 3 ஜூலை 2025 (16:21 IST)
எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் ஒரு இந்திய வீரர் அடித்த அதிகபட்ச தனிநபர் ஸ்கோரான என்ற் சாதனையை சுப்மன் கில் நெருங்கி வருகிறார்.
 
இதற்குமுன் இந்த மைதானத்தில் அதிகபட்ச தனிநபர் ஸ்கோர் அடித்தவர் விராட் கோலி. அவர் இந்த மைதானத்தில் 149 ரன்கள் அடித்திருந்தார். அந்த சாதனையை கில் நெருங்கி வருகிறார். அவர் தற்போது 132 ரன்கள் அடித்திருந்த நிலையில் இன்னும் 18 ரன்கள் அடித்தால் விராத் கோஹ்லி சாதனையை முறியடிப்பார்.
 
இன்னொரு பக்கம் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவும் பவுண்டரிகளை அடித்து, 80 பந்துகளில் தனது அரை சதத்தைப் பூர்த்தி செய்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை பொருத்தவரை இதுவொரு அதிவேகம் சதம் தான்.
 
கில், ஜடேஜா ஜோடி இந்தியா ஒரு நல்ல ஸ்கோரை எட்டுவதற்காகத் தங்கள் பார்ட்னர்ஷிப்பை நீட்டிக்கப் போராடி வருகிறது. மறுபுறம், இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் முதல் செஷனில் சில விக்கெட்டுகளை வீழ்த்த தீவிரமாக உள்ளனர்.
 
முன்னதாக, முதல் நாள் ஆட்டத்தில், கில் தனது முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக சதம் அடித்த நான்காவது இந்திய கேப்டன் என்ற பெருமையை பெற்றார். யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஒரு சிறப்பான 87 ரன்களை அடித்து, சதத்தை பெறுவதில் நூலிழையில் தவறவிட்டார். இங்கிலாந்து தரப்பில், கிறிஸ் வோக்ஸ் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்