சச்சினின் சாதனையை முறியடித்த சாய் சுதர்சன்… விரைவில் இந்திய அணியில் இடம்பிடிக்க வாய்ப்பு!

vinoth

சனி, 3 மே 2025 (07:55 IST)
நடந்து வரும் ஐபிஎல் தொடரில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் பேட்ஸ்மேன்களில் ஒருவராக சாய் சுதர்சன் இருந்து வருகிறார். குஜராத் அணிக்காக ஆடிவரும் அவர் தற்போது அதிக ரன்கள் அடித்த வீரருக்கான ஆரஞ்சு தொப்பியைப் பெற்றுள்ளார்.

இந்நிலையில் நேற்று சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரானப் போட்டியில் அவர் ஐபிஎல் போட்டிகளில் 1500 ரன்கள் என்ற மைல்கல்லைக் கடந்தார். 1500 ரன்கள் சேர்க்க அவர் எடுத்துக்கொண்ட இன்னிங்ஸ்கள் 35 தான். இதன் மூலம் குறைவான இன்னிங்ஸ்களில் 1500 ரன்களைக் கடந்தவர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையை அவர் முறியடித்துள்ளார்.

தொடர்ந்து சிறப்பாக விளையாடி வரும் சுதர்சன், ஜூன் மாதத்தில் இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியில் இடம்பிடிப்பார் என்று தற்போதே ஆருடங்கள் எழ ஆரம்பித்துள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்