பாகிஸ்தானை தாக்கினால் இந்திய வடகிழக்கு மாநிலங்களை தாக்குவோம்: வங்கதேச முன்னாள் ராணுவ அதிகாரி

Siva

வெள்ளி, 2 மே 2025 (16:11 IST)
பாகிஸ்தானை இந்தியா தாக்கினால் இந்தியாவில் உள்ள வடகிழக்கு மாநிலங்களை தாக்கி அந்த மாநிலங்களை கைப்பற்றுவோம் என முன்னாள் வங்கதேச ராணுவ அதிகாரி ஒருவர் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னர் பாகிஸ்தானை இந்திய ராணுவம் தாக்கும் என்றும் இதனால் இந்திய பாகிஸ்தான் போர் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
இந்த நிலையில் ஏற்கனவே பாகிஸ்தான் மற்றும் வங்கதேச நாடுகள் இடையே நட்பு இல்லை என்றாலும் தற்போது திடீரென முன்னாள் வங்கதேச முன்னாள் ராணுவ உயர் அதிகாரி பாகிஸ்தான இந்தியா தாக்கினால் இந்தியாவில் உள்ள ஏழு வட கிழக்கு மாநிலங்களை தாக்க அந்த மாநிலங்களை கைப்பற்றுவோம் என்று கூறியுள்ளார்.
 
இந்தியாவை பொறுத்தவரை அந்த ஏழு மாநிலங்களுக்கு கடல் வழியாக செல்ல முடியாது என்றும் அவை நிலப்பரப்பின் படி  வங்கதேசத்துக்கு சொந்தமானது என்றும் எனவே சீன உதவியுடன் அந்த ஏழு மாநிலங்களை கைப்பற்றுவோம் என்று கூறியுள்ளார்.
 
ஆனால் அவரது கூற்றை வங்கதேச அரசு மறுத்து உள்ளது. அது அவரது தனிப்பட்ட கருத்து என்றும் வங்கதேசத்தை பொருத்தவரை இந்தியாவுடன் நட்பு உறவை நாடுவதை விரும்புகிறது என்றும் தெரிவித்துள்ளது
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்