இந்தியா கூட்டணி தலைவர்களின் தூக்கம் கெட்டுவிட்டது.. பிரதமர் மோடியின் அதிரடி பேச்சு..!

Siva

வெள்ளி, 2 மே 2025 (16:00 IST)
விழிஞ்சகம் துறைமுகம் காரணமாக இந்தியா கூட்டணி தலைவர்களின் தூக்கம் கெட்டுவிட்டது என பிரதமர் மோடி இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசியுள்ளார்.
 
விழிஞ்சகம் துறைமுக திறப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது, கம்யூனிஸ்ட் அரசு தனியார் பங்களிப்பை உள்ளடக்கிய திட்டத்தை அங்கீகரித்துள்ளது என்று கூறிய அவர், விழிஞ்சகம் துறைமுக திட்டத்தால் இந்தியா கூட்டணி தலைவர்களின் தூக்கம் கெட்டுப்போய்விட்டது" என்றும் தெரிவித்தார்.
 
இந்த விழாவில் பிரதமருடன் கேரள மாநில முதல்வர் பினராய் விஜயனும் கலந்து கொண்டார். அதேபோல், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் சசிதரூரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிகழ்ச்சியின் போது பிரதமர் மோடி ஒரே ஒரு நபருடன் மட்டும்தான் கைகுலுக்கினார். அவர் சசிதரூர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பிரதமர் பேசியபோது, முதல்வர் விஜயன் இந்தியா கூட்டணியின் ஒரு முக்கியமான தலைவர் என்றும், சசிதரூரும் தன்னுடன் அருகில் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
 
"இது ஒரு வரலாற்று சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியால் இந்தியா கூட்டணி தலைவர்களின் பலர் தூக்கம் கெட்டுப்போயிருக்கும்," என்ற பிரதமர் மோடியின் பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்