1000 பள்ளிகளை மூட உத்தரவு.. உணவு பொருட்களை சேமித்து வைத்து கொள்ளுங்கள்: பாகிஸ்தான்

Siva

வெள்ளி, 2 மே 2025 (15:52 IST)
பாகிஸ்தான் ஆதரவு காஷ்மீரில் உள்ள 1000 பள்ளிகளை மூட பாகிஸ்தான் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும், அதுமட்டுமின்றி பொதுமக்கள் உணவுப் பொருட்கள் மற்றும் ரேஷன் பொருள்களை இப்போதே சேமித்து வைத்துக் கொள்ளுங்கள் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா எப்போது வேண்டுமானாலும் பாகிஸ்தானை தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீது தான் முதல் தாக்குதல் இருக்கும் என்று கூறப்படுகிறது.
 
இந்த நிலையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள 1000 மதராசஸ் என்ற பள்ளிகளை மூட உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும், இஸ்லாமிய மதம் குறித்து பயிற்றுவிக்கப்படும் இந்த பள்ளிகள் தீவிரவாதிகளின் முகாம்கள் போலவே இருப்பதால், இதை தீவிரவாதிகள் முகாம் என நினைத்து இந்தியா தாக்க வாய்ப்பு இருப்பதாகவும் பாகிஸ்தான் அச்சப்படுகிறது. எனவே தான் உடனடியாக இந்த பள்ளிகளை மூட உத்தரவு பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
அதுமட்டுமின்றி, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பொதுமக்கள் உள்பட அனைத்து பாகிஸ்தானியர்களும் உணவுப் பொருட்களை இப்போதே சேமித்து வைத்துக் கொள்ளுங்கள் என்றும், போர் தொடங்கி விட்டால் உணவுப் பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் அறிவுரைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்