பிசிசிஐ தலைவரா? நானா? சச்சின் தரப்பு அளித்த விளக்கம்!

vinoth

வெள்ளி, 12 செப்டம்பர் 2025 (08:29 IST)
இந்தியக் கிரிக்கெட்டின் மாஸ்டர் பிளாஸ்டர் என அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் ஒரு பேட்ஸ்மேனாக படைக்காத சாதனைகளை விரல்விட்டு எண்ணிவிடலாம். ஒரு நாள் போட்டிகளில் அதிக ரன்கள், டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள், நூறு சர்வதேச சதங்கள் என அவரின் சாதனைகள் இன்றளவும் முறியடிக்கப்படாமல் உள்ளன.

கடந்த 2013 ஆம் ஆண்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற அவர் அதன் பிறகு கிரிக்கெட்டை விட்டு தள்ளியே இருந்து வருகிறார். சுற்றுலா செல்லுதல், வாழ்வின் இதர விஷயங்களை ரசித்தல் என கடந்த 10 ஆண்டுகளை அவர் கழித்து வருகிறார். இந்நிலையில் அவர் பிசிசிஐ-ன் தலைவர் பொறுப்பை ஏற்கவுள்ளதாக சொல்லப்பட்டது. சமீபத்தில் தலைவராக இருந்த ரோஜர் பின்னி பதவிக்காலம் முடிந்த நிலையில் அடுத்த தலைவராக சச்சின் டெண்டுல்கரை நியமிக்கப் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது.

ஆனால் இந்த தகவலை சச்சின் தரப்பு மறுத்துள்ளது. அப்படி எந்தவொரு பேச்சுவார்த்தையிலும் பிசிசிஐ தரப்பிடம் சச்சின் ஈடுபடவில்லை என மறுத்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்