ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று நடைபெற்ற இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியில், இலங்கை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி சூப்பர் 4 சுற்றுக்குத் தகுதி பெற்றது. இதன்மூலம், சூப்பர் 4 போட்டிகளில் மோதவிருக்கும் நான்கு அணிகளும் உறுதியாகியுள்ளன.
இந்த இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெறும் அணிகள் இறுதி போட்டிக்குத் தகுதி பெறும். எனவே, ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இறுதி போட்டியில் மோதும் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. இந்த இரு அணிகளும் இறுதிப்போட்டியில் மோதுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.